சிவகங்கை ITBP பயிற்சி மையத்திற்கு சிறப்பான செயல்பாட்டிற்கான விருது !!

  • Tamil Defense
  • July 5, 2021
  • Comments Off on சிவகங்கை ITBP பயிற்சி மையத்திற்கு சிறப்பான செயல்பாட்டிற்கான விருது !!

நமது தமிழகத்தின் சிவகங்கை மாவடத்தில் இந்தோ திபெத் எல்லை காவல்படையின் RTC எனப்படும் பயிற்சி மையம் அமைந்துள்ளது.

இந்த Regional Training Centerல் தான் இந்தோ திபெத் எல்லை காவல்படைக்கு தேர்வாகும் வீரர்கள் பயிற்றுவிக்கப்பட்டு எல்லைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் இந்தோ திபெத் எல்லை காவல்படையின் பல்வேறு பயிற்சி மையங்களில் முதன்மையான மையமாக சிவகங்கை மையம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை பெற்று கொண்ட சிவகங்கை பயிற்சி மைய அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்.