கிரீக் போர்க்கப்பலுடன் இந்திய கடற்படை கப்பல் போர்பயிற்சி

  • Tamil Defense
  • July 2, 2021
  • Comments Off on கிரீக் போர்க்கப்பலுடன் இந்திய கடற்படை கப்பல் போர்பயிற்சி

இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் தாபர் கீரிக் நாட்டு போர்க்கப்பலான HS Themistoklis உடன் மெடிடெரேனியன் கடற்பகுதியில் பயிற்சி மேற்கொண்டது.

வான் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு தன்மை முன்வைத்து ஜீன் 30 அன்று பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் எகிப்து நாட்டு உறவை பேணும் பொருட்டு கடந்த ஜீன் 29 அன்று ஐஎன்எஸ் தாபர் அலெக்சாண்ட்ரியா சென்றது.

அலெக்சாண்ட்ரியா சென்ற தபார் போர்க்கப்பலின் வீரர்கள் கட்டளை அதிகாரி மகேஷ் தலைமையில் அங்குள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.மேலும் கட்டளை அதிகாரி மகேஷ் அவர்கள் அலெக்சாண்ட்ரியா கடற்தளத்தின் கமாண்டர் ரியர் அட்மிரல் அய்மான் அல் டேலி அவர்களை சந்தித்து பேசினார்.

அங்கிருந்து கிளம்பும் போது தாபர் கப்பல் எகிப்திய போர்க்கப்பலான டூஷ்கா உடன்
maritime partnership பயிற்சி மேற்கொண்டது.