சுதேசி ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் !!
1 min read

சுதேசி ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் !!

எல்லை பாதுகாப்பு படையின் 17ஆவது வருடாந்திர விருது வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

அப்போது அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஒரு சுதேசி ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை உருவாக்கி வருவதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பில் தொழில்நுட்பம் இனி முக்கிய பங்கு வகிக்க உள்ளதாகவும், இதற்காக பல்வேறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும்,

எல்லை பாதுகாப்பில் மொத்த முயற்சியையும் 3% சதவிகித வேலி கட்டமைப்பு இல்லா பகுதிகள் வீழ்த்தி விடுவதாகவும் வருகிற 2022ஆம் ஆண்டு அனைத்து எல்லையோர பகுதிகளிலும் வேலிகள் அமைக்கப்பட்டு விடும் எனவும் அவர் தெரிவித்தார்.