இத்தாலியில் இந்திய ராணுவத்திற்கு நினைவிடம் விரைவில் திறப்பு !!

இரண்டாம் உலகப்போரில் இத்தாலி நாட்டில் இந்திய ராணுவத்தின் 4-ஆவது, 8-ஆவது மற்றும் 10-ஆவது டிவிஷன்கள் அதிக தீரத்துடன் போர் புரிந்தன.

அந்த போரில் மூன்று இந்திய டிவிஷன்களின் வீரத்தை கண்டு இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் வியந்து பாராட்டினர்.

அந்த வகையில் இந்திய படைகளின் வீரத்தை போற்றும் வகையில் கேசினோ என்ற இடத்தில் இத்தாலி அரசு நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது.

இதனை 4 நாள் சுற்றுபயணமாக இங்கிலாந்து மற்றும் இத்தாலி செல்லும் இந்திய தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் நரவாணே திறந்து வைக்க உள்ளார்.

பின்னர் ரோம் நரில் உள்ள கெச்சிங்கோலா இத்தாலி தரைப்படை தளத்தில் உள்ள கண்ணிவெடி மையத்தை பார்வையிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.