
இந்திய கடற்படை ட்ரோன் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இதர தளவாடங்கள் வாங்குவதில் மற்ற இரு படைகளை விடவும் சிறப்பாக செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கடற்படை ட்ரோன்களை சரியாக குறிபார்த்து வீழ்த்த உதவும் SMASH-2000 என்கிற அமைப்பை இஸ்ரேலிடம் இருந்து முன்னமே வாங்கியுள்ளது.
இந்த SMASH-2000 குறிபார்க்கும் அமைப்புகளை தற்போது ஏகே47 துப்பாக்கிகளில் பயன்படுத்தி வரும் இந்திய கடற்படை விரைவில் ஏகே203 வந்த பிறகு அவற்றில் இணைத்து பயன்படுத்தி கொள்ள உள்ளது.
அதை போலவே இந்திய கடற்படை ஒப்பந்தங்களை முடிக்கும் வேகமும் மிகவும் சிறப்பாக உள்ளது அதாவது மேற்குறிப்பிட்ட அமைப்புகளுக்கான பேச்சுவார்த்தை பிற நடைமுறைகள் கையெழுத்து ஆகியவற்றை 6 மாதங்களில் முடித்துள்ளது.
இதுபற்றி பாதுகாப்பு அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்திய கடற்படை ட்ரோன்களால் ஏற்படும் ஆபத்துகளை முன்னமே கணித்துவிட்டு திறம்பட செயல்பட்டு உள்ளதாக கூறினார்.