
கிழக்கு லடாக் பகுதியில் சீனப்படைகளின் நடமாட்டத்தை கவனிக்க இந்திய இராணுவம் எல்லைப் பகுதியில் சென்சார்கள் மற்றும் காமிராக்களை பொருத்தியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையை பொறுத்த வரை எல்லையில் முழு படைவிலக்கம் என்பது தறபோது முடிவடையாதது போல தான் உள்ளது.கடந்த வருடம் மே மாதம் முதல் இரு நாட்டு படைகளும் எல்லையில் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்காக இந்திய இராணுவம் தற்போது motion-sensitive cameras மற்றும் சென்சார்களை களமிறக்கி உள்ளது.இதன் மூலம் சீனப்படைகளின் நடமாட்டங்களை கவனிக்க முடியும்.
எல்லை முழுதும் ஒரு கண்காணிப்பு வளையத்தை ஏற்படுத்த இந்திய இராணுவம் திட்டமிட்டுள்ளது.மேலும் எல்லையில் எதிரிகள் காத்திருப்பதால் திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் உள்ளன.