படையில் இணைக்கப்பட்ட குறைந்த நீளமுள்ள பாலம் அமைப்பு வாகனம்

  • Tamil Defense
  • July 2, 2021
  • Comments Off on படையில் இணைக்கப்பட்ட குறைந்த நீளமுள்ள பாலம் அமைப்பு வாகனம்

முதல் தொகுப்பாக 12 Short Span Bridging System (SSBS)-10 m படையில் இணைக்கப்பட்டுள்ளது.நமது DRDO-ஆல் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டு தளபதி நரவனே அவர்கள் முன்னிலையில் படையில் இணைக்கப்பட்டுள்ளது.டெல்லி கண்டோன்ட்மென்டில் உள்ள கரியப்பா பரேடு மைதானத்தில் நடந்த விழாவில் DRDO சேர்மேன் Dr G சதீஷ் ரெட்டி அவர்களும் கலந்து கொண்டார்.

9.5மீ நீளமுள்ள பள்ளம் போன்ற இடங்களில் பாலமாக இந்த அமைப்பை உபயோகிக்கலாம்.இந்த பாலம் 4மீ அகலம் இருக்கும்.போர்க்காலங்களில் இந்த பாலத்தின் உதவியுடன் வீரர்கள் மற்றும் படைப்பிரிவுகள் வேகமாகவும் காலதாமதம் இன்றியும் இலக்கை நோக்கி பயணிக்கலாம்.

Tatra 6×6 chassis வாகனத்தில் 5மீ நீள SSBS அமைப்பு மற்றும் Tatra 8×8 சேசிசில் 10மீ நீள SSBS என இரு வகைகளில் இந்த அமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது 12 அமைப்புகள் படையில் இணைக்கப்பட்டுள்ளது.மொத்தம் 102 அமைப்புகள் படையில் இணைக்கப்பட உள்ளன.