அதிநவீன ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை மீது ஆர்வம் காட்டும் வெளிநாடுகள் ஏற்றுமதி மையமாகிறதா இந்தியா ??

  • Tamil Defense
  • July 11, 2021
  • Comments Off on அதிநவீன ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை மீது ஆர்வம் காட்டும் வெளிநாடுகள் ஏற்றுமதி மையமாகிறதா இந்தியா ??

இந்திய விமானப்படைக்கு ரூ.500 கோடி மதிப்பில் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது

இதற்கான விழாவில் இந்திய விமானப்படை சார்பில் ஏர் கமோடர் அஜய் சிங்கால் மற்றும் பாரத் டைனமிக்ஸ் சார்பில் ஒய்வு பெற்ற கமோடர் கவுல் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் பாரத் டைனமிக்ஸ் நிறுவன அதிகாரிகள் பேசும் போது சில வெளிநாடுகள் ஆகாஷ் ஏவுகணை அமைப்பு மீது ஆர்வம் காட்டி வருவதாகவும் ஆகவே ஏற்றுமதி வாய்ப்புகளும் உள்ளதாக கூறினர்.

மேலும் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தால் உள்நாட்டு தேவைகள் மற்றும் ஏற்றுமதி தேவைகளையும் சந்திக்கும் அளவிற்கு திறன் உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.