ஆறு புதிய நீர்மூழ்கிகள்; அறிவிப்பு வெளியிட்ட இந்திய பாதுகாப்பு அமைச்சகம்

  • Tamil Defense
  • July 21, 2021
  • Comments Off on ஆறு புதிய நீர்மூழ்கிகள்; அறிவிப்பு வெளியிட்ட இந்திய பாதுகாப்பு அமைச்சகம்

மேக் இன் இந்தியா திட்டத்தின் அடுத்த கட்டமாக AIP பொருத்தப்பட்ட ஆறு புதிய கன்வென்சன்ல் நீர்மூழ்கிகள் இந்தியாவிலேயே கட்டுவதற்கான அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சுமார் 40000 கோடிகள் செலவில் இந்த ஆறு நீர்மூழ்கிகளும் இந்தியாவில் கட்டப்படும்.இந்த நீர்மூழ்கிகளில் பியுவல் செல் தொழில்நுட்பத்தான் ஆன AIP (Air Independent Propulsion Plant) அமைப்பு இருத்தல் அவசியம்.இந்த AIP அமைப்பு தான் நீர்மூழ்கிகளை நீண்ட நேரம் நீருக்குள் இருக்க உதவும்.

தற்போது போட்டியில் ஜெர்மன்,பிரான்ஸ்,இரஷ்யா, தென் கொரியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன.தேர்ந்தெடுக்கப்படும் நாட்டின் நிறுவனம் இந்தியாவின் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இணைந்து இந்த நீர்மூழ்கிகளை கட்டும்.