அதிநவீன ஏவுகணையை பெற உள்ள நமது தேஜஸ் விமானம்; என்ன ஏவுகணை அது?

  • Tamil Defense
  • July 14, 2021
  • Comments Off on அதிநவீன ஏவுகணையை பெற உள்ள நமது தேஜஸ் விமானம்; என்ன ஏவுகணை அது?

அஸ்திரா மார்க் 1 அதிநவீன ஏவுகணை நமது தேஜஸ் மார்க் 1 விமானத்துடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அடுத்த சில வாரங்களில் தேஜசில் வைத்து இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போதுள்ள 38+18( பயிற்சி வகை) விமானங்களிலும் அஸ்திரா ஏவுகணை இணைக்கப்பட உள்ளது.அஸ்திரா இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள வான்-வான் தாக்குதல் ஏவுகணை ஆகும்.

கண்ணுக்கு எட்டியதற்கும் அப்பால் வரும் வான் இலக்குகளை தாக்கும் திறன் பெற்றது இந்த விமானம் ஆகும்.சுகாய் விமானத்தில் வைத்து ஏற்கனவே பலமுறை சோதனை செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவின் சொந்த தயாரிப்பு விமானமான தேஜசில் இந்த ஏவுகணை பொருத்தப்பட்டு சோதனைகள் விரைவில் செய்யப்பட உள்ளது.

இந்தியா ஆயுதத் தயாரிப்பில் தன்னிறைவு என்ற திட்டத்தில் தொடர்ந்து முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.