ஆப்கனில் இருந்து வெளியேறும் இந்திய அதிகாரிகள்

  • Tamil Defense
  • July 12, 2021
  • Comments Off on ஆப்கனில் இருந்து வெளியேறும் இந்திய அதிகாரிகள்

கந்தகார் நகரில் தாலிபன்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை ஒட்டி அங்கிருக்கும் இந்திய அதிகாரிகளை சிறப்பு விமானம் மூலம் இந்திய மீட்டுள்ளது.

தற்போது அங்கு தூதரகத்தில் இந்தியாவிற்காக வேலை செய்யும் உள்ளூர் ஆப்கானியர்கள் மட்டுமே உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள.

தற்போது காபூலில் உள்ள இந்திய தூதரகம் மட்டுமே இந்திய அதிகாரிகளுடன் செயல்பாட்டில் உள்ளது.ஆப்கனில் தற்போது நடக்கும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

அமெரிக்கா மற்றும் நேச நாட்டு படைகள் ஆப்கனில் இருந்து வெளியேறி வருவதை அடுத்து ஆப்கனை வேகமாக கைப்பற்றி வருகின்றனர் தாலிபன்கள்.

பாக் படையினரும் தாலிபன்களோடு ஆப்கன் படையினருக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.