சீன எல்லைக்கு 50ஆயிரம் துருப்புக்களை அனுப்பிய இந்தியா !!
1 min read

சீன எல்லைக்கு 50ஆயிரம் துருப்புக்களை அனுப்பிய இந்தியா !!

சீனா உடனான எல்லையோர பகுதிக்கு சுமார் 50 ஆயிரம் துருப்புக்களை இந்திய ராணுவம் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி மூத்த ராணுவ அதிகாரிகள் கூறுகையில் கடந்த வருடத்தை விட 40% அளவுக்கு வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும், தற்போது 2 லட்சம் வீரர்கள் சீன எல்லையில் உள்ளதாகவும் கூறினர்.

இவர்களில் பாகிஸ்தான் எல்லையோரம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கு பெற்ற அனுபவம் வாய்ந்த வீரர்களும் அடங்குவர் எனவும்,

தற்போது வரை சீன தரப்பு வீரர்கள் எண்ணிக்கை பற்றிய தகவல் இல்லை எனவும் ஆனால் சீன படைகள் ராக்கெட் அமைப்புகள் பிரங்கிகள் போர் விமானங்கள் ஆகியவற்ளை நிலைநிறுத்தி உள்ளதாகவும் கூறினர்.

இதுபற்றி பேசிய முன்னாள் ராணுவ அதிகாரி லெஃப்டினன்ட் ஜெனரல் ஹூடா அதிகளவில் வீரர்கள் எல்லையில் இருப்பது சீனாவை பின்னுக்கு தள்ள உதவும் என்றாலும்,

சில நேரங்களில் இருதரப்பு வீரர்கள் இடையேயான ஒரு சிறு பிரச்சினை கூட மிகப்பெரிய மோதலாக மாறும் அபாயமும் உள்ளதாக அதனை களத்தில் உள்ள அதிகாரிகள் கையாள வேண்டிய சூழல் இருப்பதாகவும் கருத்து தெரிவித்தார்