ஜம்மு விமான தள தாக்குதல் எதிரொலி ;ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் வாங்க திட்டம்

  • Tamil Defense
  • July 6, 2021
  • Comments Off on ஜம்மு விமான தள தாக்குதல் எதிரொலி ;ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் வாங்க திட்டம்

ஜம்மு விமான தள தாக்குதலுக்கு பிறகு தற்போது இந்திய விமானப்படை 10 Counter Unmanned Aircraft System (CUASs) எனப்படும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை வாங்க திட்டமிட்டுள்ளது.இந்திய நிறுவனங்களிடம் இருந்து இந்த அமைப்புகள் பெறப்பட உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன் ட்ரோன்கள் கொண்டு ஜம்மு தளத்தில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இது போன்ற தாக்குதல்கள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.இந்த தாக்குதலில் இரு விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது 10 ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் வாங்கப்பட உள்ளன.இந்த அமைப்புகள் ட்ரோன்களை கண்டறிந்து கண்காணித்து அழிக்க கூடியது ஆகும்.