
இந்தியா சீனா மோதல் போக்கு எல்லையில் தொடர்ந்து வருவதால் பாதுகாப்பு படைகளுக்கு வழங்கப்பட்ட அவசரகால அதிகாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த அதிகாரங்கள் மூலம் பாதுகாப்பு படைகள் மிக விரைவாக தேவையான ஆயுதங்களை கொள்முதல் செய்து கொள்ள முடியும்.
வரும் ஆகஸ்டு 31 வரை இந்த அதிகாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இதன் மூலம் பாதுகாப்பு படைகள் தங்கள் அவசர தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
கல்வான் மோதலுக்கு பிறகு 300 கோடிகள் வரை அவசர தேவையாக உபயோகிக்க அரசு அனுமதி வழங்கியது.இதன் மூலம் பல படிகள் வழியாக ஆயுதங்கள் பெறுவதின் தாமதம் குறைக்கப்பட்டது.
தவிர எல்லைப் புறத்தில் பெரிய அளவிலான சாலைகள் மற்றும் கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.