வங்கதேசத்திற்கு 6 ரோந்து படகுகளை ஏற்றுமதி செய்யும் இந்தியா !!

  • Tamil Defense
  • July 5, 2021
  • Comments Off on வங்கதேசத்திற்கு 6 ரோந்து படகுகளை ஏற்றுமதி செய்யும் இந்தியா !!

வங்கதேச மீன்வளத்துறை அமைச்சகத்திடம் இருந்து 6 ரோந்து படகுகளை வாங்குவதற்கான கோரிக்கை இந்தியாவுக்கு விடுக்கப்பட்டது.

இதனையடுத்து கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் கப்பல் கட்டுமான தளத்துடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதனையடுத்து கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு பங்கு சந்தையில் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்டன் ரீச் கப்பல் கட்டுமான தளமானது இந்திய பாதுகாப்பு அமைசகத்தின் கீழ் இயங்கி இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு கப்பல்களை கட்டும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.