ஆப்கனில் இருந்து இந்திய அதிகாரிகளை சில நாட்களுக்கு முன் இந்தியா மீட்டது.ஆப்கனின் கந்தகாரில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் மீட்கப்பட்டனர்.
ஆப்கனில் தாலிபன்கள் மற்றும் அரசு படைகளுக்கு இடையேயான மோதல் முற்றி வருகிறது.தாலிபன்கள் ஆப்கனின் பகுதிகளை மிக வேகமாக கைப்பற்றி வருகின்றனர்.இந்த சண்டை தற்போது கந்தகாரை நெருங்கி வரும் நேரத்தில் அங்கிருந்த இந்தியர்களை இந்தியா தற்போது மீட்டுள்ளது.
இதற்காக ஆப்கனுக்கு இந்திய விமானங்கள் பறந்த போது அவை பாக் வான் பகுதிக்கு மேல் பறக்கவில்லை.அதாவது பாகிஸ்தானின் வான் பகுதிகளை உபயோகிக்காமல் அவை பாக்கை சுற்றி சென்றுள்ளன.
தற்போது கந்தகார் தூதரகம் அங்குள்ள உள்ளூர் ஆப்கானியர்கள் உதவியுடன் தொடர்ந்து இயங்கி வருகிறது.