எதிர்கால போர்க்கப்பல்களில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்

  • Tamil Defense
  • July 4, 2021
  • Comments Off on எதிர்கால போர்க்கப்பல்களில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்

இந்திய இனி வடிவமைத்து கட்டவுள்ள அடுத்த தலைமுறை டெஸ்ட்ராயர் ரக போர்கப்பல்களில் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் இடம்பெறும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணை கப்பலின் முன்னனி தாக்கும் ஏவுகணையாக இருக்கும்.இந்தியா தற்போது ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.பிரம்மோஸ் ஏவுகணையின் ஹைப்பர்சோனிக் வகை தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது.

ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை தவிர்த்து கப்பலில் எலக்ட்ரோ மேக்னடிக் ரெய்ல் துப்பாக்கிகளும் பொறுத்தப்பட உள்ளது.இவை அருகில் வரும் இலக்குகளை அழிக்க பயன்படுத்தப்படும்.

மேலும் வான் பாதுகாப்பிற்காக லேசரை அடிப்படையாக கொண்ட ஆயுதங்களும் கப்பலில் இடம்பெறும் என்ற தகவலும் இடம்பெற்றுள்ளது.

இதற்கான அனுமதி விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் இந்த கப்பல்கள் 13000 டன்கள் எடையுடையதாக இருக்கும் என கூறப்படுகிறது.