
வங்கதேச அரசிற்கு ஆறு 13மீ ரோந்து கப்பல்களை கட்டும் ஆர்டரை பெற்றது கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம்.
கொல்கத்தாவில் உள்ள கப்பல் கட்டும் தளம் தான் கார்டன்ரீச் கப்பல் கட்டும் தளம்.இது இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைகளுக்கு கப்பல்களை கட்டி அளித்து வருகிறது.
தற்போது வங்கதேசத்திற்காக ஆறு கப்பல்களை கட்ட உள்ளது.சுமார் 1.8 மில்லியன் டாலர்கள் செலவில் இந்த ஆறு கப்பல்களையும் பெறுகிறது வங்கதேசம்.
இதற்கான டென்டரில் ஐரோப்பா மற்றும் ஆசியாவே சேர்ந்த பல நிறுவனங்கள் கலந்து கொண்டாலும் இறுதியில் கார்டர் ரீச் தளம் இந்த ஆர்டரை பெற்றுள்ளது.