வெடிபொருளுடன் சுற்றிய ட்ரோனை சுட்டு வீழ்த்திய வீரர்கள்

  • Tamil Defense
  • July 23, 2021
  • Comments Off on வெடிபொருளுடன் சுற்றிய ட்ரோனை சுட்டு வீழ்த்திய வீரர்கள்

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே ஐஇடி வெடிபொருளுடன் வந்த சிறிய ஆளில்லா விமானத்தை வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

காஷ்மீரின் அக்னூர் ஏரியா பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.எல்லைக்குள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை சிறிய ஆளில்லா ட்ரோன்கள் மூலமாக கொண்டு வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.

ஜம்மு தளத்தின் மீது கூட சில நாட்களுக்கு முன் சிறிய ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச எல்லையில் இருந்து ஆறு கிமீ தொலைவில் வந்த இந்த ட்ரோனை வீரர்கள் சுட்டுவீழ்த்தியுள்ளனர்.