கடற்கரையோர கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்தும் டிஆர்டிஓ
கடற்கரையோர கண்காணிப்பு திறனை மேம்படுத்தும் பொருட்டு டிஆர்டிஓ-வின் டேராடூன் பிரிவு புதிய எலக்ட்ரோ ஆப்டிகல் கடலோர மற்றும் துறைமுகம் சார்ந்த கண்காணிப்பு அமைப்பை மேம்படுத்த உள்ளது.
டேராடூனில் உள்ள Instruments Research and Development Establishment நிறுவனம் இந்த அமைப்பை மேம்படுத்தும்.இந்த அமைப்பில் தெர்மல் இமேஜர்கள் மற்றும் ஆப்டிகல் காமிராக்கள் இருக்கும்.இதன் உதவியுடன் இலக்கை கண்டறிந்து கண்காணிக்க முடியும்.
அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்ற இரவு மற்றும் பகலிலும் செயல்படக் கூடிய இந்த அமைப்பு கடற்கரையோரமாக உள்ள முக்கிய இடங்களில் நிறுவப்படும்.இந்த அமைப்புகளை கடலோர காவல் படை நிர்வகிக்கும்.
25கிமீ தூரத்திற்கு இந்த அமைப்பால் கண்காணிக்க முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.5மீ அளவுள்ள சிறிய படகை கூட கண்டறிய வல்லது.மேலும் இதனால் ஒரே நேரத்தில் பல இலக்குகளை கண்காணிக்க முடியும்.
இந்தியாவுடைய கடலோர பகுதி என்பது 7516கிமீ நீளமுடையது.