அடுத்த தலைமுறை நீர்மூழ்கி ஏவு ஏவுகணை

  • Tamil Defense
  • July 4, 2021
  • Comments Off on அடுத்த தலைமுறை நீர்மூழ்கி ஏவு ஏவுகணை

நீர்மூழ்கியில் வைத்து ஏவப்படக்கூடிய அடுத்த தலைமுறை ஏவுகணை வடிவமைப்பை DRDO முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரு நிலை ஏவுகணையான இதில் முதல் நிலை solid booster மற்றும் இரண்டாவது நிலை Turbofan ஆக இருக்கும்.இதில் அதிநவீன RF seeker பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது கட்டப்பட்டு வரும் நீர்மூழ்கிகளில் எதிர்காலத்தில் இந்த ஏவுகணை பொருத்தப்படும்.தற்போது கடற்படையில் கே-15 மற்றும் கே-4 ஆகிய ஏவுகணைகள் செயல்பாட்டில் உள்ளன.