LCH வானூர்தியில் இருந்து துருவாஸ்திரா ஏவுகணை சோதனை

  • Tamil Defense
  • July 16, 2021
  • Comments Off on LCH வானூர்தியில் இருந்து துருவாஸ்திரா ஏவுகணை சோதனை

ஹெலினா டேங்க் எதிர்ப்பு ஏவுகணையின் அதிநவீன வகையான துருவாஸ்திரா ஏவுகணை அடுத்த வருடத்தில் எல்சிஎச் வானூர்தியில் இருந்து சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த துருவாஸ்திரா ஏவுகணை நமது டிஆர்டிஓ தயாரிப்பு ஆகும்.

இந்த டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை எந்த தாக்குதல் வானூர்தியிலும் இணைத்து செயல்படுத்தும் வண்ணம் மேம்படுத்தி வருகிறது நமது டிஆர்டிஓ.இதற்கு முன் இந்த வருடம் முதற்பகுதியில் துருவாஸ்திரா ஏவுகணை ருத்ரா வானூர்தியில் இருந்து ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையில் துருவாஸ்திரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு படையில் இணைக்கவும் அனுமதி பெற்றது.எல்சிஎச் வானூர்தியில் இருந்து துருவாஸ்திரா ஏவப்பட்டு வெற்றி பெற்றால் இரு திட்டங்களுக்குமே இது ஒரு மைல் கல்லாக அமையும்.