சீனாவின் கண்காணிப்பில் இந்தியாவின் அணுஏவுகணை சோதனைகள்

  • Tamil Defense
  • July 10, 2021
  • Comments Off on சீனாவின் கண்காணிப்பில் இந்தியாவின் அணுஏவுகணை சோதனைகள்

இந்தியா தற்போது நடத்தி வரும் அணுஏவுகணை சோதனைகளை சீனா உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்தியா சில நாட்களுக்கு முன் அக்னி-பி என்ற பலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்தது.

இது குறித்து சௌத் சைனா மார்னிக் போஸ்ட் என்ற நிறுவனம் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தது.இந்த அக்னி-பி ஏவுகணை சீனாவின் DF-21D ஏவுகணைக்கு ஒத்த திறனுடையது என கூறப்படுகிறது.

இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு எதிரான இலக்குகளை தாக்கியழிக்க இந்த ஏவுகணை பயன்படுத்தப்படும் என அந்நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

சீனாவின் DF-26D உலகின் முதல் கப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக் ஏவுகணை என கூறப்படுகிறது.இந்த ஏவுகணை 1800கிமீ தூரம் வரை செல்லக்கூடியது.மற்றும் DF-26 B ஏவுகணை 5000கிமீ தூரம் வரை செல்லக்கூடியது.

நமது அக்னி-பி ஏவுகணை 1,000 முதல் 2,000கிமீ (621-1,242 miles) தூரம் வரை செல்லக்கூடியது.இதை ட்ரக்கில் வைத்து இடமாற்றம் செய்ய முடியும்.