லடாக் அருகே புதிய வான் தளத்தை அமைக்கும் சீனா

  • Tamil Defense
  • July 21, 2021
  • Comments Off on லடாக் அருகே புதிய வான் தளத்தை அமைக்கும் சீனா

இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் அதற்குள்ள தடைகளை நீக்கும் பொருட்டு கிழக்கு லடாக் அருகே சின்சியாங் மகாணத்தில் புதிய வான் தளத்தை சீனா அமைத்து வருகிறது.

சீனாவின் கஸ்கர் மற்றும் ஹோதன் தளத்திற்கு இடையே இந்த புதிய தளம் வருகிறது.இந்த இரு தளங்களில் உதவியுடன் தான் சீனா தற்போது எல்லையில் வான்வழி ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறது.இரண்டு தளங்களின் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் பொருட்டு இந்த புதிய தளத்தை சீனா ஏற்படுத்தியுள்ளது.

சின்சியாங் தளத்தில் உள்ள சாக்சே என்னுமிடத்தில் தான் இந்த தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.வேலைப்பாடுகள் நடந்து வருவதாகவும் விரைவில் இந்த புதிய தளம் செயல்பாட்டிற்கு வரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே உள்ள இரு தளங்களுக்கு இடையே உள்ள மொத்த தூரம் 400கிமீ ஆகும்.தற்போது இவற்றிற்கு இடையே புதிய தளம் அமைகிறது.இது தவிர உத்ரகண்ட் மாநில எல்லையில் உள்ள தளத்திற்கு சீனா நிறைய ஆளில்லா விமானங்கள் கொண்டு வந்து ரோந்து பணிகளில் ஈடுபடுவதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்தான் கஸ்கர் மற்றும் ஹோகன் தளங்களில் இருந்து சீனா போர்பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.இந்த பயிற்சி நேரத்தில் இந்திய விமானப்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.