எல்லையோரம் சீனாவின் எஸ்400 அமைப்புகள்; இந்தியாவின் நிலைப்பாடு என்ன ??

  • Tamil Defense
  • July 5, 2021
  • Comments Off on எல்லையோரம் சீனாவின் எஸ்400 அமைப்புகள்; இந்தியாவின் நிலைப்பாடு என்ன ??

சீனா திபெத்தில் அமைந்துள்ள நியிங்ச்சி விமான தளம் மற்றும் ஸின்ஜியாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஹோட்டன் விமானதளம் ஆகியவற்றை பாதுகாக்க எஸ்400 அமைப்புகளை நிலைநிறுத்தி உள்ளது.

இதனையடுத்து இந்திய பாதுகாப்பு சிந்தனையாளர்கள் புதிய வழிகளை பற்றிய சிந்தனையில் உள்ளனர், அதாவது ட்ரோன்கள், குழு ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் ஆகியவற்றை பயன்படுத்துவது தான் அது.

அதை போல இந்திய விமானப்படை ஹாம்மர் ஏவுகணைகளை அதிகம் விரும்புகிறது காரணம் அவை நிலபரப்புக்கு அருகே தாழ்வாக பறந்து சென்று இலக்கை நெருங்கியதும் மேலேழும்பி 90டிகிர கோணத்தில் வான் பாதுகாப்பு அமைப்புகளை வீழ்த்தக்கூடியதாகும்.

தற்போது மேற்குறிப்பிட்ட ஏவுகணையை தயாரிக்கும் ஃபிரெஞ்சு நாட்டின் MBDA நிறுவனம் இந்தியாவுடன் இணைந்து தொலைதூரம் செல்லக்கூடிய மேம்படுத்தப்பட்ட ஏவுகணையை தயாரிக்க விருப்பம் தெரிவித்து உள்ளது.

இந்தியா வருங்காலங்களில் மிக அதிக தூரம் கண்காணிக்கக்கூடிய ரேடார்கள் மற்றும் இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடிய அதிநவீன ஏவுகணைகளில் முதலீடு செய்வது மிகவும் உகந்தது ஆகும்.

இந்தியாவுக்கு ரஷ்யா இந்த வருடத்தின் இறுதியில் எஸ்400 அமைப்பின் டெலிவரியை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.