
சண்டை என்று வந்தால் இந்தியாவிற்குள் அதிவேகமாக நுழையும் எண்ணத்தில் சீனா எல்லைக் கோடுக்கு அருகே கான்கீரீட் கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது.
வடக்கு சிக்கிமின் நாகு லா பகுதிக்கு எதிர்புறம் சீனப்பகுதிக்குள் சில கிமீ தூரத்தில் இந்த கட்டுமானத்தை சீன இராணுவம் ஏற்படுத்தியுள்ளது.இந்த கட்டுமானங்கள் மூலம் சண்டை எனும் போது இந்திய வீரர்கள் எல்லைக்கு வருவதற்கு முன்பே சீன வீரர்களை அனுப்பி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது.
இதுதவிர கிழக்கு லடாக் மற்றும் அருணாச்சல் எல்லைப் பகுதிகளிலும் கூட இதுபோன்ற நிரந்தர கான்கிரீட் கட்டுமானங்களை சீனா ஏற்படுத்தி வருகிறது.சீன வீரர்கள் குளிரில் சரியாக செயல்பட முடியாததை சரிசெய்யும் பொருட்டும் இந்த கட்டுமானங்களை சீனா ஏற்படுத்தியுள்ளது.
கடந்த முறை லடாக்கில் குளிர்தாங்க முடியாமல் சீன வீரர்கள் அவதிப்பட்டுள்ளனர்.இதை சரிசெய்ய சீனா தனது வீரர்களை தொடர்ந்து மாற்றி கொண்டே இருந்தது.பங்கோங் ஏரி பகுதியில் இருந்து சீனப்படைகள் பின்வாங்கியிருந்தாலும் அதற்கு பின்புறம் உள்ள சீனப்பகுதிகளிலும் இதுபோன்ற கட்டுமானங்களை சீனா ஏற்படுத்தி வருகிறது.