சீனாவிடம் வாங்கிய பாக் கடற்படையின் புதிய போர்க்கப்பல்

சீனாவிடம் வாங்கிய பாக் கடற்படையின் புதிய போர்க்கப்பல் படங்கள் வெளியானது !!

பாகிஸ்தான் கடற்படை சமீபத்தில் சீனாவிடம் இருந்து டைப்054ஏ/பி ரக ஃப்ரிகேட் போர் கப்பல் ஒன்றை பெற்று கொண்ட நிலையில் அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இந்த வகை கப்பலானது ஏற்கனவே சீன கடற்படையிடம் உள்ள டைப்054 ரக ஃப்ரிகேட் கப்பலின் மாற்றியமைக்கப்பட்ட ஏற்றுமதி வடிவம் என கூறப்படுகிறது.

இந்த புதிய மாற்றியமைக்கப்பட்ட கப்பல்களின் உடலமைப்பு பழைய கப்பல்களை போன்றது தான் ஆனால் சென்சார் மற்றும் ஆயுதங்கள் புதியவை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

4000 டன் எடை மற்றும் 140மீட்டர் நீளம் கொண்ட இந்த கலன்களால் 18 நாட்ஸ் வேகத்தில் சுமார் 4000 நாட்டிகல் மைல்கள் தொலைவுக்கு பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வகை கப்பல்களை கொண்டு வான் இலக்குகள், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளை தாக்கி அழிக்க முடியும் என சீன தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.