மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல் வளாகத்தை அமைக்கும் சீனா !!

  • Tamil Defense
  • July 3, 2021
  • Comments Off on மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல் வளாகத்தை அமைக்கும் சீனா !!

சீனா தனது நாட்டில் மேற்கு பாலைவன பகுதியில் மிகப்பெரிய அளவில் பரந்த ஏவுகணை தாக்குதல் வளாகம் ஒன்றை அமைத்து வருவது செயற்கைகோள் புகைப்படம் மூலமாக தெரிய வந்துள்ளது.

PLANET LABS Inc எனப்படும் தனியார் நிறுவனம் எடுத்த இப்புகைபடங்களை ஆய்வு செய்த அமெரிக்க வல்லுனர்கள் சுமார் 120 ஏவுகணை ஏவுகுழாய்கள் அமைக்கபடுவதாகவும்,

இவற்றில் அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாங்கக்கூடிய ஏவுகணைகள் ஏவப்பட முடியும் என கூறுகின்றனர்.

சீனாவின் கான்ஸூ மாகாணத்தில் சுமார் பல சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த ஏவுகணை ஏவு மையம் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பின் கட்டுமான வேகம் ஆச்சரிபடத்தக்க வேகத்தில் நடைபெற்று வருவதாகவும் இவற்றில் இருந்து சீனாவின் மிகவும் அதிநவீன DF21 கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகள் இணைக்கப்படலாம் என தெரிகிறது.