பிரம்மாஸ் ஏவுகணை சோதனை தோல்வி விசாரணைக்கு உத்தரவு !!

  • Tamil Defense
  • July 14, 2021
  • Comments Off on பிரம்மாஸ் ஏவுகணை சோதனை தோல்வி விசாரணைக்கு உத்தரவு !!

சமீபத்தில் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பிரம்மாஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட ரகத்தின் சோதனையை நடத்தியது.

இந்த சோதனையின் போது புறப்பட்ட சற்று நேரத்திலேயே ஏவுகணை கடலில் விழுந்து ழிபத்தை சந்திக்க சோதனை தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்த சோதனை தோல்வி அடைய காரணமாக PROPULSION அமைப்பில் கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனாலும் விரிவான விசாரணை நடத்தி ஆய்வறிக்கை சமர்ப்பிக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உத்தரவு பிறப்பித்து உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.