பிரம்மோஸ் ஏவுகணை சோதனை தோல்வி காரணம் என்ன ?

திங்கள் அன்று ஒடிசா கடற்கரையோர பகுதியில் நடத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியள்ளது.மேலும் இது மிகவும் அரிதான சம்பவம் என கூறப்படுகிறது.

ஏவுகணை பறக்க தொடங்கிய சிறிது நேரத்தில் கீழே விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சோதனை செய்யப்பட்ட ரகம் 450கிமீ வரை செல்லக்கூடியது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தோல்விக்கான காரணம் குறித்து தற்போது டிஆர்டிஓ ஆராய்ந்து வருகிறது.பிரம்மோஸ் மிகவும் நம்பகமான ஏவுகணை ஆகும்.இதுவரை நடைபெற்ற சோதனைகளிலேயே பிரம்மோஸ் தோல்வியடைந்தது மிகவும் அபூர்வமே.

தற்போது வெளியாகியுள்ள முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பது என்னவெனில் ஏவுகணையின் புரோபல்சன் அமைப்பில் குறைபாடு இருந்ததாக கூறப்படுகிறது.