பயங்கரவாத தலைவர் ஹபீஸ் சயீது வீட்டருகே குண்டு வெடிப்பு ; இந்தியாவை குற்றம் சொல்லும் பாக்

  • Tamil Defense
  • July 9, 2021
  • Comments Off on பயங்கரவாத தலைவர் ஹபீஸ் சயீது வீட்டருகே குண்டு வெடிப்பு ; இந்தியாவை குற்றம் சொல்லும் பாக்

கடந்த ஜீன் மாதம் 23ம் தேதி ஜமாத் உத் தவா பயங்கரவாத இயக்க தலைவன் ஹபீஸ் சயீது வீட்டருகே குண்டு வெடித்தது.தற்போது இந்த தாக்குதலை இந்தியாவின் உளவுத் துறை தான் நடத்தியது எனவும் இது இந்தியா நடத்திய பயங்கரவாத தாக்குதல் எனவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

தாக்குதல் நடத்தியவர் இந்தியர் எனவும் அவர் இந்திய உளவுத் துறையான ரா இயக்கத்தை சேர்ந்தவர் எனவும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயித் யூசுப் கூறியுள்ளார்.

திட்டம் வகுத்தது மற்றும் இதற்கு நிதி உதவி அளித்ததற்கு இந்தியாவிற்கு தொடர்பு உள்ளதாக பாக் பிரதமர் இம்ரான் கான் டிவிட்டரில் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா பக்கம் இருந்து எந்த மறுப்பும் வெளியிடப்படவில்லை.இந்தியாவிற்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாகவும் பாக் கூறியுள்ளது.இந்திய உளவுத்துறைக்கு இதில் பங்கு உள்ளதாகவும் பாக் பாதுகாப்பு ஆலோசகர் கூறியுள்ளார்.