
தாலிபான்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இந்தியாவிடம் ராணுவ ரீதியான உதவியை கோருவோம் என ஆஃப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான ஆஃப்கானிஸ்தான் தூதர் ஃபரீத் மமூந்த்சே சமீபத்தில் ஊடகங்களிடம் பேசிய போது தாலிபான்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இந்திய ராணுவ உதவியை கோருவோம் என்றார்.
நாங்கள் இந்தியா தனது வீரர்களை அனுப்ப வேண்டும் என எதிர்பார்க்கவில்லை ஆனால் அதிக ஆயுத உதவிகளை எதிர் பார்க்கிறோம் என்றார்.
சமீபத்தில் இந்தியா தனது விமானங்கள் மூலமாக 80 டன் பிரங்கி குண்டுகளை ஆஃப்கானிஸ்தான் படைகளுக்கு டெலிவரி செய்தது குறிப்பிடத்தக்கது.