
முதல் தொகுதி MH-60 ‘Romeo’ நீர்மூழ்கி எதிர்ப்பு வானூர்திகளை இந்தியாவிற்கு டெலிவரி செய்துள்ளது அமெரிக்க கடற்படை
முதற்கட்டமாக இரு வானூர்திகள் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்தியா அமெரிக்காவிடம் இருந்து மொத்தம் 24 வானூர்திகள் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.2.4 பில்லியன் டாலர்கள் செலவில் இந்த வானூர்திகள் வழங்கப்படுகின்றன.இந்த வானூர்திகளை Lockheed Martin நிறுவனம் தயாரிக்கிறது.
சான்டியாகோ கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் இந்த இரு வானூர்திகளும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.இந்த வானூர்திகள் கடற்படைக்கு மிகப் பெரிய சக்தியை வழங்கும்.நீர்மூழ்கி எதிர்ப்பு பணிகளை தவிர பல பணிகளில் இந்த வானூர்திகளை பயன்படுத்த முடியும்.