ஆஃப்கன் தூதரின் மகள் பாகிஸ்தானில் கடத்தி சித்திரவதை; பாக் ஐ.எஸ்.ஐ மீது வலுக்கும் சந்தேகம் !!

  • Tamil Defense
  • July 18, 2021
  • Comments Off on ஆஃப்கன் தூதரின் மகள் பாகிஸ்தானில் கடத்தி சித்திரவதை; பாக் ஐ.எஸ்.ஐ மீது வலுக்கும் சந்தேகம் !!

பாகிஸ்தான் நாட்டிற்கான ஆஃப்கானிஸ்தான் தூதர் நஜிபுல்லா அலிகெல்லின் மகள் சில்சிலா அலிகிலல்லை மர்ம நபர்கள் கடத்தி பல மணிநேரம் சித்திரவதை செய்து விடுவித்து உள்ளனர்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் முக்கிய வணிக பகுதியில் வாடகை வாகனத்தில் சென்ற போது அவரை மர்ம நபர்கள் கடத்தி உள்ளனர்.

பின்னர் விடுவிக்கப்பட்ட அவரின் கை கால்கள் கட்டபட்ட நிலையில் உடலில் வீக்கங்கள் மற்றும் காயங்கள் காணப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து ஆஃப்கானிஸ்தான் அரசு காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரை வரவழைத்து கடும் கண்டனம் தெரிவித்ததோடு தனது அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இதனை வேண்மென பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ செய்திருக்கலாம் என பல்வேறு தரப்பினரும் சந்தேகிக்கின்றனர்.

தீவிரமாக தாலிபான்கள் பாகிஸ்தான் (மறைமுகமாக) ஆதரித்து ஆயுத உதவி பயிற்சி பாதுகாப்பு அளித்தது அனைவருக்கும் தெரிந்தததே ஆகும்.