வெளியேறும் அமெரிக்க படைகள்; துப்பாக்கி எடுக்கும் ஆப்கன் மக்கள்

  • Tamil Defense
  • July 1, 2021
  • Comments Off on வெளியேறும் அமெரிக்க படைகள்; துப்பாக்கி எடுக்கும் ஆப்கன் மக்கள்

அமெரிக்க படைகள் ஆப்கனில் இருந்து வெளியேறுவதை அடுத்து அங்குள்ள மக்கள் தற்போது ஆயுதம் ஏந்த தொடங்கியுள்ளனர்.பார்வின் மாகாணத்தை சேர்ந்த முகமது சலாங்கி என்பவர் தாலிபன்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியுள்ளார்.அவர் தாலிபன்களுக்கு எதிராக தனது எச்சரிக்கையும் பதிவு செய்துள்ளார்.

தற்போது தாலிபன்கள் அரசு படைகளுக்கு எதிராக போரிட்டு கனிசமான அளவு வெற்றி பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அவர் தொடர்ந்து பேசுகையில் தாலிபன்கள் எங்களுக்கு எதிராக போர் தொடுக்கும் பட்சத்தில் எங்களது ஏழு வயது மகன் கூட ஆயுதம் ஏந்தி போரிடுவான் என அவர் கூறியுள்ளார்.

தாலிபன்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியுள்ள நூற்றுக்கணக்கான மக்களுள் முகமது சலாங்கி அவர்களும் ஒருவர் ஆவார்.சுமார் இரு தலைமுறை போராட்டத்திற்கு பிறகு தற்போது அமெரிக்க மற்றும் அதன் நேச நாட்டு படைகள் ஆப்கனில் இருந்து வெளியேறி வருகின்றன.

சர்வதேச படைகள் கைவிட்ட பிறகு எங்கள் நாட்டை பாதுகாக்க எங்களுக்கு வேறு வழியில்லை என போராட்டத்தில் இணைந்து கொண்ட மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.

அமெரிக்க படைகளை தொடர்ந்து ஜெர்மன் படைகளும் தற்போது தனது படைகளை திரும்ப பெற்று வருகிறது.