
தாலிபான்கள் உடனான சண்டையில் உயிருக்கு பயந்து தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பிசென்று அடைக்கலம் கோரிய ஆஃப்கன் ராணுவ வீரர்கள் மீண்டும் நாடு திரும்பி உள்ளனர்.
மேலும் ஆங்காங்கே தங்களது நிலைகளை கைவிட்டு ஒடிய 2300 ராணுவ வீரர்கள் மீண்டும் தங்களது பணிக்கு திரும்பி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி பேசிய அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் நாடு திரும்பிய வீரர்கள் ஃபஸாபாத் பகுதியை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவர் என்றார்.
நாட்டின் வடக்கு மாகாணமான படக்ஷான் தஜிகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ளது இந்த மாகாணத்தின் தலைநகர் தான் படக்ஷான் ஆகும் இதுவரை அம்மாகாணத்தில் மொத்த்ம் உள்ள 28 மாவட்டங்களில்
26 மாவட்டங்களை தாலிபான்கள் கைபற்றி உள்ளனர் அதிலும் மூன்று மாவட்டங்களில் சண்டையே நடைபெறவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயம் ஆகும்.