பாக் குண்டுவெடிப்பில் சிக்கி 9 சீனர்கள் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானுக்கு சீனர்களை ஏற்றிகொண்டு சென்ற பேருந்து வெடித்ததில் ஒன்பது சீனர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
கைபர் பக்துன்வா பகுதியில் தற்போது கட்டப்பட்டு வரும் அணைக்கட்டிற்கு சென்றுகொண்டிருந்த சீன என்ஜினியர்கள் மற்றும் சர்வேயர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சாலையில் குண்டு பதுக்கி வைத்து வெடிக்கப்பட்டதா அல்லது பேருந்தில் பொருத்திவைக்கப்பட்டு வெடிக்கப்பட்டதா என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

அந்த பேருந்தில் 30 சீனர்கள் வரை பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சீன பாக் எகானமி காரிடர் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஹைட்ரோ எலக்ட்ரிக் புரோஜெக்ட் நடைபெற்று வந்தது.

இந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரிக்க சீனா பாகிஸ்தானை கேட்டுக்கொண்டுள்ளது.மேலும் பாக்கில் உள்ள சீனர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவும் சீனா கேட்டுக்கொண்டுள்ளது.