மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை சுமார் 81,000 வீரர்கள் விருப்ப ஒய்வு பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல் 5 துணை ராணுவ படைகளான எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் காவல்படை, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை, சஷாஸ்திர சீமா பல் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியவற்றின் விவரங்களை உள்ளடக்கியது ஆகும்.
இதுபற்றிய விரிவான ஆய்வறிக்கை எதுவும் இல்லை ஆனால் இந்த ஒய்வுகளுக்கு குடும்ப சூழல், பணிச்சுமை, ஆகியவை காரணம் காட்டப்படுகிறது.
எல்லை பாதுகாப்பு படையில் தான் அதிகபட்சமாக 36 ஆயிரம் வீரர்கள், ரிசர்வ் காவல்படையில் 26,000 வீரர்கள் விருப்ப ஒய்வு பெற்றுள்ளனர். 2017ஆம் ஆண்டு மட்டுமே 11,000 வீரர்கள் ஒய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.