மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை சுமார் 81,000 வீரர்கள் விருப்ப ஒய்வு பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் 5 துணை ராணுவ படைகளான எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் காவல்படை, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை, சஷாஸ்திர சீமா பல் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியவற்றின் விவரங்களை உள்ளடக்கியது ஆகும். இதுபற்றிய விரிவான ஆய்வறிக்கை எதுவும் இல்லை ஆனால் இந்த […]
Read Moreஎல்லை பாதுகாப்பு படையின் 17ஆவது வருடாந்திர விருது வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஒரு சுதேசி ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை உருவாக்கி வருவதாக செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அவர் பேசுகையில் நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பில் தொழில்நுட்பம் இனி முக்கிய பங்கு வகிக்க உள்ளதாகவும், இதற்காக பல்வேறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், எல்லை பாதுகாப்பில் மொத்த முயற்சியையும் […]
Read Moreஆஸ்திரேலியா அருகே அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா தலைமையில் டாலிஸ்மேன் சேபர் என்ற பெயரில் மிக பிரமாண்டமான கடற்படை பயிற்சி துவங்கியுள்ளது. இதில் தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகள் நேரடியாகவும் இந்தியா ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கடற்படைகள் பார்வையாளர்களாகவும் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் சீன கடற்படையை சேர்ந்த கண்காணிப்பு கப்பல் ஒன்று இந்த பயிற்சிகளை கண்காணிக்க ஆஸ்திரேலிய கடல்பகுதிக்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Read Moreபாகிஸ்தான் நாட்டிற்கான ஆஃப்கானிஸ்தான் தூதர் நஜிபுல்லா அலிகெல்லின் மகள் சில்சிலா அலிகிலல்லை மர்ம நபர்கள் கடத்தி பல மணிநேரம் சித்திரவதை செய்து விடுவித்து உள்ளனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் முக்கிய வணிக பகுதியில் வாடகை வாகனத்தில் சென்ற போது அவரை மர்ம நபர்கள் கடத்தி உள்ளனர். பின்னர் விடுவிக்கப்பட்ட அவரின் கை கால்கள் கட்டபட்ட நிலையில் உடலில் வீக்கங்கள் மற்றும் காயங்கள் காணப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து ஆஃப்கானிஸ்தான் அரசு காபூலில் […]
Read Moreஉலகின் மிகச்சிறந்த ஸ்டெல்த் போர் விமானங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது இதில் அமெரிக்க ரஷ்ய மற்றும் சீன விமானங்கள் இடம்பெற்று உள்ளன. அமெரிக்காவின் எஃப்-22 மற்றும் எஃப்-35 ஆகிய ஸ்டெல்த் போர் விமானங்கள் முறையே முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களில் உள்ளன. இதனையடுத்து ரஷ்ய தயாரிப்பான சுகோய்-57 மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது, இது சுகோய் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக சீனாவின் செங்டு ஜே-21 நான்காம் இடத்தில் உள்ளது இதனை சீனாவை சேர்ந்த செங்டு […]
Read More1971 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்று உலக வரைபடத்தையே மாற்றி அமைத்தது. இதனையடுத்து இந்த வருடம் 50ஆவது ஆண்டு என்பதையடுத்து ராணுவம் பல்வேறு நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக போரின் நினைவு ஜோதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஷ்மீர் சென்றடைந்த ஜோதியை 15ஆவது கோர் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் டி பி பான்டே தலைமையில் போரில் பங்கு […]
Read Moreஆஃப்கன் படைகள் பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள சில டவுன்களை கைப்பற்றி உள்ள தாலிபான்களை விரட்டியடிக்க முயற்சித்து வருகின்றன. இதனிடையே ஸ்பின் போல்டக் பகுதியில் உள்ள தாலிபான்களை விரட்டியடிக்க தடை ஏற்படுத்தும் பொருட்டு பாக் தரப்பு செயல்படுவதாகவும், அந்த பகுதியை நெருங்கினால் ஆஃப்கன் படைகள் மீது தாக்குதல் நடத்துப்படும் என பாகிஸ்தான் விமானப்படை எச்சரிக்கை விடுத்துள்ளது எனவும் ஆஃப்கன் துணை அதிபர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். பாகிஸ்தான் தரப்பு ஆஃப்கன் துணை அதிபர் அம்ருல்லா சாலேஹ்வின் குற்றசாட்டை அடியோடு மறுத்துள்ளது.
Read More