BREAKING காஷ்மீரில் பயங்கரவாத தொடர்புடைய 11 அரசு பணியாளர்கள் பணி நீக்கம் !!

  • Tamil Defense
  • July 11, 2021
  • Comments Off on BREAKING காஷ்மீரில் பயங்கரவாத தொடர்புடைய 11 அரசு பணியாளர்கள் பணி நீக்கம் !!

ஜம்மு காஷ்மீர் மாநில அரசில் பணியாற்றி வந்த 11 பேருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

அந்த 11 பேரில் இருவர் ஹிஸ்புல் முஜாஹீதின் தலைவன் சயத் சலாஹீதினுடைய மகன்கள் என்பதும், சயத் சலாஹீதின் காஷ்மீரில் இயங்கும் அனைத்து பயங்கரவாத இயக்கங்களையும் ஒருங்கிணைக்கும் அமைப்பின் தலைவன் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மாநில நிர்வாகம் இது போன்ற பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.