Day: July 11, 2021

BREAKING ஹைதி அதிபரை கொன்ற அமெரிக்க மற்றும் கொலம்பிய குழுவினர் !!

July 11, 2021

சமீபத்தில் ஹைத்தி நாட்டின் அதிபராக இருந்த ஜோவினெல் மெஸ்ஸி அவரது வீட்டிற்கு அருகே வைத்து மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதனையடுத்து ஹைத்தி பாதுகாப்பு படைகள் மற்றும் காவல்துறை ஆகியவை குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். தற்போது வரை 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 8 பேரை ஹைத்தி பாதுகாப்பு படைகள் நாடு முழுவதும் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் ஒய்வு பெற்ற […]

Read More

BREAKING காஷ்மீரில் பயங்கரவாத தொடர்புடைய 11 அரசு பணியாளர்கள் பணி நீக்கம் !!

July 11, 2021

ஜம்மு காஷ்மீர் மாநில அரசில் பணியாற்றி வந்த 11 பேருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த 11 பேரில் இருவர் ஹிஸ்புல் முஜாஹீதின் தலைவன் சயத் சலாஹீதினுடைய மகன்கள் என்பதும், சயத் சலாஹீதின் காஷ்மீரில் இயங்கும் அனைத்து பயங்கரவாத இயக்கங்களையும் ஒருங்கிணைக்கும் அமைப்பின் தலைவன் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாநில நிர்வாகம் இது போன்ற பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்து […]

Read More

தஜிகிஸ்தானுக்கு தப்பியோடிய வீரர்களை நாட்டிற்கு அழைத்து வரும் ஆஃப்கன் அரசு !!

July 11, 2021

தாலிபான்கள் உடனான சண்டையில் உயிருக்கு பயந்து தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பிசென்று அடைக்கலம் கோரிய ஆஃப்கன் ராணுவ வீரர்கள் மீண்டும் நாடு திரும்பி உள்ளனர். மேலும் ஆங்காங்கே தங்களது நிலைகளை கைவிட்டு ஒடிய 2300 ராணுவ வீரர்கள் மீண்டும் தங்களது பணிக்கு திரும்பி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி பேசிய அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் நாடு திரும்பிய வீரர்கள் ஃபஸாபாத் பகுதியை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவர் என்றார். நாட்டின் வடக்கு மாகாணமான […]

Read More

சீனாவிடம் வாங்கிய பாக் கடற்படையின் புதிய போர்க்கப்பல்

July 11, 2021

சீனாவிடம் வாங்கிய பாக் கடற்படையின் புதிய போர்க்கப்பல் படங்கள் வெளியானது !! பாகிஸ்தான் கடற்படை சமீபத்தில் சீனாவிடம் இருந்து டைப்054ஏ/பி ரக ஃப்ரிகேட் போர் கப்பல் ஒன்றை பெற்று கொண்ட நிலையில் அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த வகை கப்பலானது ஏற்கனவே சீன கடற்படையிடம் உள்ள டைப்054 ரக ஃப்ரிகேட் கப்பலின் மாற்றியமைக்கப்பட்ட ஏற்றுமதி வடிவம் என கூறப்படுகிறது. இந்த புதிய மாற்றியமைக்கப்பட்ட கப்பல்களின் உடலமைப்பு பழைய கப்பல்களை போன்றது தான் ஆனால் சென்சார் மற்றும் […]

Read More

அதிநவீன ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை மீது ஆர்வம் காட்டும் வெளிநாடுகள் ஏற்றுமதி மையமாகிறதா இந்தியா ??

July 11, 2021

இந்திய விமானப்படைக்கு ரூ.500 கோடி மதிப்பில் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது இதற்கான விழாவில் இந்திய விமானப்படை சார்பில் ஏர் கமோடர் அஜய் சிங்கால் மற்றும் பாரத் டைனமிக்ஸ் சார்பில் ஒய்வு பெற்ற கமோடர் கவுல் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் பாரத் டைனமிக்ஸ் நிறுவன அதிகாரிகள் பேசும் போது சில வெளிநாடுகள் ஆகாஷ் ஏவுகணை அமைப்பு மீது ஆர்வம் காட்டி வருவதாகவும் ஆகவே ஏற்றுமதி வாய்ப்புகளும் உள்ளதாக கூறினர். […]

Read More