பெருகும் நீர்மூழ்கி எதிர்ப்பு திறன் ;10வது பொசைடான் விமானம் இந்தியா வந்தது

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து பத்தாவது பி-8ஐ நீர்மூழ்கி எதிர்ப்பு திறன் கொண்ட விமானத்தை இந்திய கடற்படை பெற்றுள்ளது.

2009ல் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முதல் முறையாக எட்டு விமானங்கள் வாங்க போயிங் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது.அதன் பிறகு மேலும் நான்கு விமானங்கள் வாங்க 2016ல் ஒப்பந்தம் மேற்கொண்டது.

நீர்மூழ்கி எதிர்ப்பு திறன்,கண்காணிப்பு திறன் மற்றும் ரோந்து பணிகளையும் தாண்டி இந்த விமானம் பல்திறன் கொண்டது ஆகும்.