Day: July 10, 2021

காஷ்மிரில் இரு பயங்கரவாதியை வீழ்த்திய வீரர்கள்

July 10, 2021

காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் பாதுகாப்பு படைகள் நடத்தி ஆபரேசனில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். அனந்தநாக்கின் கவாரிகம் பகுதியில் நடத்தப்பட்ட இந்த ஆபரேசனில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.கிடைத்த உளவு தகவல்கள் அடிப்படையில் இந்த ஆபரேசன் தொடங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு குறிப்பிட்ட பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய போது பயங்கரவாதிகள் வீரர்கள் மீது தாக்கியுள்ளனர்..தொடர்ந்து நடந்த சண்டையில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

Read More

விமானப்படைக்கு புதிய வான்பாதுகாப்பு ஏவுகணைகள்

July 10, 2021

இந்திய விமானப்படைக்காக பாரத் டைனமிக் நிறுவனத்திடம் இருந்து சுமார் 499 கோடிகள் செலவில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் வாங்கப்பட உள்ளன.இதற்கான ஒப்பந்தத்தில் ஏர் கமோடோர் அஜஸ் சிங்கால் அவர்கள் கையொப்பம் இட்டார். தற்போது பாரத் டைனமிக் நிறுவனம் இராணுவம் மற்றும் விமானப்படைக்கு ஆகாஷ் ஏவுகணைகளை தயாரித்து வழங்கி வருகிறது.பாரத் டைனமிக் நிறுவனம் தற்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முயற்சி செய்து வருகிறது.மேலும் சில நாடுகள் இந்த அமைப்பை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த […]

Read More

இந்தியா சீனா அணுஆயுதப் போட்டி

July 10, 2021

இந்தியா சீனாவுக்கு இடையே கடந்த ஒரு வருடமாக எல்லைத் தகறாரு நீடித்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே அணுஆயுத போட்டி இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கூறியுள்ளார். சீனா 1964ம் ஆண்டில் அணுஆயுத திறன் பெற்றது.இந்தியா மறுபக்கம் 1998ம் ஆண்டு தான் பெற்றது.சீனாவின் அணு மற்றும் அதுசார்ந்த ஆயுத ஆராய்ச்சிம் மிகப் பெரியவை என அமைச்சர் கூறியுள்ளார். எல்லைத் தொடர்பு தொடர்பாக இருநாட்டு உறவுகளில் பிரச்சனை இருப்பது உண்மை தான் எனினும் அது […]

Read More

சீனாவின் கண்காணிப்பில் இந்தியாவின் அணுஏவுகணை சோதனைகள்

July 10, 2021

இந்தியா தற்போது நடத்தி வரும் அணுஏவுகணை சோதனைகளை சீனா உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்தியா சில நாட்களுக்கு முன் அக்னி-பி என்ற பலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்தது. இது குறித்து சௌத் சைனா மார்னிக் போஸ்ட் என்ற நிறுவனம் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தது.இந்த அக்னி-பி ஏவுகணை சீனாவின் DF-21D ஏவுகணைக்கு ஒத்த திறனுடையது என கூறப்படுகிறது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு எதிரான இலக்குகளை தாக்கியழிக்க இந்த ஏவுகணை பயன்படுத்தப்படும் என அந்நிறுவனம் செய்தி […]

Read More