
ஹால் நிறுவனம் தயாரித்து மிகவும் பிரச்சனைக்குள்ளாகி மூன்று வருட காலம் கிடப்பில் போடப்பட்டு பின்பு பழைய தவறுகள் திருத்தப்பட்டு தற்போது ஸ்பின் சோதனைகளில் ஹால் நிறுவனத்தால் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.கடந்த வருடம் வந்த முதல் ஸ்பின் சோதனைகள் ஹால் நிறுவனத்திற்கு நம்பிக்கை தரும் வண்ணம் அமைந்துள்ளதால் இந்த விமானம் 2024வாக்கில் தயாரிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிடப்பில் போடப்பட்ட பிறகு விமானத்தை ஹால் அறிவியலாளர்கள் மீண்டும் வேறு விதமாக வடிவமைத்தனர்.அதன் பிறகு ஸ்பின் எனப்படும் சுழல் சோதனைகளுக்கு விமானம் உள்ளாக்கப்பட்டு வருகிறது.
தற்போது சீன கொரானா வைரஸ் காரணமாக சோதனைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன எனினும் 2022ன் முற்பகுதிக்குள் அனைத்து சோதனைகளும் முடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.