விக்ராந்த் எப்போது படையில் இணைக்கப்படும் ? புதிய தகவல்கள்
1 min read

விக்ராந்த் எப்போது படையில் இணைக்கப்படும் ? புதிய தகவல்கள்

இந்தியா சொந்தமாகவே வடிவமைத்து கட்டமைத்து வரும் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் அடுத்த வருடம் படையில் இணைக்கப்பட உள்ளது.மேலும் இதன் போர்த்திறன் , வேகம் மற்றும் செயல்படும் திறன் கடற்படைக்கு புதிய தெம்பூட்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளார்.

கொச்சின் தளத்தில் விக்ராந்த் கட்டுமானத்தை பார்வையிட்ட அவர் விக்ராந்த் கப்பலை இந்தியாவின் பெருமை எனவும் இந்தியாவின் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் சிறந்த எடுத்துக்காட்டு எனவும் புகழ்ந்துள்ளார்.

இந்திய சுதந்திரமடைந்து அடுத்த வருடம் 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.அடுத்த வருடம் விக்ராந்த் படையில் இணைக்கப்படுவது நமது திறனை உலகுக்கு அறிவிக்கும் என அவர் கூறியுள்ளார்.

இது தவிர தற்போது கார்வார் என்னுமிடத்தில் இந்திய கடற்படையின் மிகப்பெரிய தளம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.புரோஜெக்ட் Seabird (அல்லது தமிழில் கடற்பறவை ) எனும் பெயரில் இந்த தளம் கட்டப்பட்டு வருகிறது.

தற்போது கட்டப்பட்டு வரும் விக்ராந்த் 75 சதவீதம் இந்திய தயாரிப்பு ஆகும்.வடிவமைப்பு, கட்டுமானத்திற்கு தேவையான ஸ்டீல் மற்றும் முக்கிய ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் அனைத்தும் இந்தியத் தயாரிப்பே.