இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு !!

  • Tamil Defense
  • June 11, 2021
  • Comments Off on இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு !!

வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் பிரிவின் இயக்குனர் ஜெனரலாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.இவர் அதிக அனுபவம் வாய்ந்த முத்த கடற்படை அதிகாரி ஆவார்.

வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் ஒர் தலைசிறந்த நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை வல்லுனர் ஆவார், இவர் தனது பணிக்காலத்தில் இந்திய கடற்படையின் முன்னனி கப்பல்களில் பணியாற்றி உள்ளார்.

ஐ.என்.எஸ் மைசூர் நாசகாரி போர்க்கப்பலின் கப்பலின் முதன்மை போர் அதிகாரியாகவும் பின்னர் அக்கப்பலின் இரண்டாவது கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.

மேலும் ஐ.என்.எஸ். விராட் விமானந்தாங்கி கப்பல், ஏவுகணை ஃப்ரிகேட் ஐ.என்.எஸ். ஷிவாலிக் மற்றும் ஏவுகணை கார்வெட் ஐ.என்.எஸ் கோரா ஆகிய முன்னனி கப்பல்களின் தலைமை கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.