ப்ரடேட்டர் ட்ரோன்கள் மிகப்பெரிய உதவியாக அமைத்துள்ளன கடற்படை துணை தளபதி வைஸ் அட்மிரல் அஷோக் குமார் !!

  • Tamil Defense
  • June 20, 2021
  • Comments Off on ப்ரடேட்டர் ட்ரோன்கள் மிகப்பெரிய உதவியாக அமைத்துள்ளன கடற்படை துணை தளபதி வைஸ் அட்மிரல் அஷோக் குமார் !!

இந்திய கடற்படையின் துணை தளபதி வைஸ் அட்மிரல் அஷோக் குமார் நேற்று தலைநகர் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் அமெரிக்காவிடம் இருந்து பெற்ற ப்ரடேட்டர் ட்ரோன்கள் இந்திய கடற்படைக்கு பேருதவியாக அமைந்துள்ளது எனவும்,

அவை தங்களின் நீண்ட தூர கண்காணிப்பு திறன் மூலமாக இந்திய பெருங்கடல் பகுதியில் பரந்த அளவில் சந்தேகத்துக்கு இடமான கலன்களை கண்காணிக்க உதவுதாகவும் கூறினார்.

லடாக் எல்லை பிரச்சினைகளின் போது அமெரிக்காவிடம் இருந்து இந்தியா குத்தகை அடிப்படையில் இரண்டு ப்ரடேட்டர் ரக ட்ரோன்களை பெற்று கொண்டதும்,

அவை இரண்டையும் இந்திய பெருங்கடல் பகுதியில் நடைபெறும் ஊடுருவல்களை குறிப்பாக சீன ஊடுருவல்களை தடுக்கவும் இந்திய கடற்படை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.