இலகுரக விமானம் குறித்த புதிய தகவல்கள்; எப்போது படையில் இணையும் ?

  • Tamil Defense
  • June 22, 2021
  • Comments Off on இலகுரக விமானம் குறித்த புதிய தகவல்கள்; எப்போது படையில் இணையும் ?

தற்போது இராணுவத்தில் இலகுரக விமானங்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இராணுவத்தில் தற்போது பழயை சீட்டா மற்றும் செடக் ரக வானூர்திகள் தான் உள்ளன.தற்போது கிடைத்துள்ள தகவல்படி இந்தியா மேம்படுத்தியுள்ள புதிய இலகுரக வானூர்தி 2022ம் ஆண்டின் இறுதியில் இந்திய இராணுவத்திற்கு கிடைக்க உள்ளது.முதல் தொகுதியாக ஆறு வானூர்திகள் வழங்கப்பட உள்ளன.

இந்த புதிய LUH வானூர்தி தற்போது செயல்பாட்டில் உள்ள பழைய சீட்டா மற்றும் செடக் வானூர்திகளுக்கு மாற்றாக இராணுவத்தில் இணைய உள்ளது.

இந்த LUH-ன் எடை மூன்று டன்கள் ஆகும்.இலகுரக பணிகளுக்காக மட்டுமின்றி ரோந்து பணிகளுக்காகவும் இந்த வானூர்தியை உபயோகிக்க முடியும்.

இந்திய இராணுவம் மற்றும் விமானப்படைகளுக்கு தற்போது 200 விமானங்கள் வரை தேவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.