தப்பியோட முயன்ற கைதான முக்கிய பயங்கரவாதி
காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் இரு பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளனர்.அதின் ஒருவன் தான் முக்கிய லஷ்கர் பயங்கரவாதி நதீம் அப்ரார் என்பவன்.
நதீமை பாதுகாப்பு படைகள் நேற்று கைது செய்து விசாரணை செய்த போது ஸ்ரீநகரினன பரிம்போரா பகுதியின் மல்கூறா என்னுமிடத்தில் உள்ள ஒரு வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளதாக பாதுகாப்பு படைகளிடம் கூறியுள்ளான்.
இதனையடுத்து பாதுகாப்பு படைகள் அந்த ஆயுதத்தை கைப்பற்ற அவன் கூறிய வீட்டிற்கு சென்றுள்ளனர்.ஆனால் அங்கு பதுங்கியிருந்த மற்றொரு பயங்கரவாதி பாதுகாப்பு படை வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான்.
சுதாரித்துகொண்ட வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தினர்.இந்த சண்டையில் லஷ்கர் பயங்கரவாதி நதீம் அப்ரார் மற்றும் அவனது கூட்டாளி ஆகியோரை வீரர்கள் போட்டுத் தள்ளியுள்ளனர்.
அங்கிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.இந்த சண்டையில் மூன்று சிஆர்பிஎப் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.