இந்திய தரைப்படையை பயங்கரவாத எதிர்ப்பு பணியில் இருந்து விலக்கும் காலம் வந்துவிட்டது !!

  • Tamil Defense
  • June 13, 2021
  • Comments Off on இந்திய தரைப்படையை பயங்கரவாத எதிர்ப்பு பணியில் இருந்து விலக்கும் காலம் வந்துவிட்டது !!

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லை பிரச்சினைகள் குறிப்பாக கல்வான் மோதலுக்கு பிறகு பன்மடங்கு பதட்டத்தை அதிகரித்துள்ள நிலையில் நமது பாதுகாப்பு கொள்கையை சீராய்வு செய்ய வேண்டிய சூழலில் உள்ளோம்.

காரணம் இந்த இரு எல்லையோரமும் ஏற்படும் ஆபத்துகளை அதிகமாக கவனித்து செயல்பட வேண்டிய சூழலில் இந்திய தரைப்படை நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சி தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளது.

ராணுவத்திற்கான அடிப்படை தேவையே வெளியில் இருந்து வரும் ஆபத்துகளை எதிர்கொண்டு நாட்டை காப்பதாகும் அதன் அடிப்படையில் தான் பயிற்சிகளும் ஆயுதங்களும் வழங்கப்படுகிறது.

ஆனால் ராணுவம் இன்றைய காலகட்டத்தில் உள்நாட்டில் நிலவும் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளை ஒடுக்க மிக மிக அதிகமாக பயன்படுத்தி வரப்படுகிறது.

அதாவது ராணுவத்தை பொறுத்தவரையில் வெளிநாட்டில் இருந்து வரும் ஆபத்துகளுக்கு முதன்மை முக்கியத்துவம் அளிக்கபட்டு உள்நாட்டு பிரச்சினைகள் அதற்கு அடுத்தபடியாக இருக்க வேண்டும்.

கடந்த 1950 களில் இருந்து ராணுவம் இந்த பணிகளில் ஈடுபட தொடங்கியது பின்னர் 80களில் பன்மடங்கு அதிகரித்தது இந்த பிரச்சினையை ராணுவமும் நன்கு உணர்ந்து உள்ளது.

இதற்கு தீர்வு துணை ராணுவ படைகளை முழுமையாக பயன்படுத்துவது தான் இன்றைய காலகட்டத்தில் துணை ராணுவ படையினர் ராணுவத்திற்கு இணையான பயிற்சிகளை பெறுகின்றனர், உள்நாட்டு பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான ஆயுதங்களும் அவர்களிடம் உள்ளது.

BSF, ITBP, SSB, AR போன்ற படைகள் பாகிஸ்தான், சீனா, பூட்டான், நேபாளம், மியான்மர் மற்றும் வங்கதேச எல்லைகளை காத்து வருகின்றனர் மேலும் CRPF, CISF போன்ற படைகள் சட்டம் ஒழுங்கு பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு போன்ற பணிகளை கவனித்து வருககன்றனர்.

மேற்குறிப்பிட்டவை இந்த படைகளின் நிச்சயிக்கப்பட்ட பணிகள் ஆனாலும் தற்போது இந்த அனைத்து படைகளுமே நக்சல் எதிர்ப்பு போர், வடகிழக்கு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு போன்ற பணிகளையும் கவனித்து வருகின்றன.

தற்போதைய நிலையில் எல்லை பாதுகாப்பு மேலாண்மை மற்றும் கிளர்ச்சி, பயங்கரவாத ஒழிப்பு பணிகளில் அனுபவம் இல்லாத ஐ.பி.எஸ் அதிகாரிகள் இந்த படைகளின் தலைமை பொறுப்பு மற்றும் இதர முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

சட்டம் ஒழுங்கிற்கும் மேற்குறிப்பிட்ட பணிகளுக்கும் தொடர்பு இல்லை மேலும் காவல்துறையின் அதிகாரத்தை மீறிய செயல்கள் நடைபெறும் போது தான் துணை ராணுவம் அல்லது ராணுவம் வரவழைக்கப்படும் என்பது நமக்கு தெரிந்தது தான்.

ஆகவே முதலில் துணை ராணுவப்படைகளை ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் இருந்து விடுவிக்க வேண்டும் பின்னர் மேற்குறிப்பிட்ட பணிகளை மேற்கொண்டு வரும் அந்தந்த துணை ராணுவப்படைகளின் அதிகாரிகளையே தலைமை மற்றும் இதர பொறுப்புகிளில் பணி அமர்த்த வேண்டும்.

மேலும் இந்த படைகளை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் உதாரணமாக அனைத்து துணை ராணுவ படைகளையும் ஒன்றாக இணைத்து ஒரே படையாக புதிய பெயரில் (உதாரணமாக NATIONAL GUARD) உருமாற்றம் செய்ய வேண்டும்,

அல்லது BSF, ITBP, SSB ஆகிய படைகளை ஒருங்கிணைத்து (INDIAN FORNTIER/ BORDER CORPS) என எல்லை பாதுகாப்பிற்கான பிரத்யேக படையாகவும், CISF, CRPF ஆகியவற்றை இணைத்து (HOMELAND SECURITY FORCE) உள்நாட்டு பாதுகாப்பிற்கான படையாகவும் மறு உருவாக்கம் செயய் வேண்டும்.

மேலும் மேற்குறிப்பிட்டப்படி இரண்டாவது வகையில் மறுசீரமைப்பு செய்தால் இரண்டு படைகளுக்குமே தெள்ள தெளிவான பணிகள் மற்றும் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும், உள்நாட்டை காக்கும் படை எல்லைக்கோ அல்லது எல்லையை காக்கும் படை உள்நாட்டிலோ வரக்கூடாது.

இனி ASSAM RIFLES படை தற்போது ராணுவத்தின் வசம் உள்ளது ஆகவே அதனை ராணுவத்திடமே ஒப்படைப்பது நலம் காரணம் சீனாவுடனான எல்லையில் ராணுவத்திற்கு அதிக படைகள் தேவை ஆகவே வடகிழக்கு எல்லைகளில் இதனை ராணுவம் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவற்றை எல்லாம் செய்த பிறகு அடுத்தகட்டமாக காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பாதுகாப்பு பொறுப்புகளில் இருந்து ராணுவம் விடுவிக்கபட்டு துணை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும், பின்னர் நவீனப்படுத்துதலை தொடங்க வேண்டும், மேலும் ஒரு உண்மையான சிறப்பு படையை தோற்றுவிக்கும் வகையில் முப்படைகளின் சிறப்பு படைகள் மூலமாக பயிற்சி அளிக்க வேண்டும்.

இதன்பின்னர் அதிகாரிகள் தேர்வில் இந்திய தரைப்படை கடற்படை விமானப்படை மற்றும் கடலோர காவல்படைகளில் பயன்படுத்தப்படும் SSB நேர்முக தேர்வு முறை அமல்படுத்தப்பட வேண்டும், இதன் மூலம் மிகவும் தரமான அதிகாரிகள் இந்த படைகளுக்கு கிடைப்பர்
இப்படியான பல்வேறு சீர்த்தருத்தங்களை கால தாமதம் செய்யாமல் அரசு விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்பது முன்னாள் ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு வல்லுனர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.